நாளைமுதல் தேசிய கொடியை பறக்க விடுங்கள்..!!

இலங்கையின் 73 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் மற்றும் வாகனங்களிலும் தேசியக் கொடியை பறக்கவிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அரச பாதுகாப்பு உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. பெப்ரவரி மாதம் 4ம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவையொட்டி நாளை 1 ம் திகதி தொடக்கம் 7 ம் திகதி வரையில் இவ்வாறு தேசியக் கொடியை காட்சிப்படுத்துமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.